Posted on 26 Nov 2011

போரில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பூவைத்து வணங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே எமது நாட்டில் காணப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கவலை தெரிவித்துள்ளார்.
Posted on 26 Nov 2011

மரணத்திற்கு முன்னர் தன்னுடைய மண்ணோடு சென்று வாழவேண்டும் என்ற எண்ணக்கனவுடன் தனக்காகவும் தான் சார்ந்த மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்த ஒரு மகத்தான ஆத்மாவின் மறைவாகவே வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத் தலைவரும், தேசியப்பற்றாளருமான ஆ.சி.நடராஜா ஜயாவின் மறைவை நாம் பார்க்கிறோம் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்திருக்கின்றார்.
Posted on 26 Nov 2011

இந்த கிராமங்களில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளனர்.
Posted on 20 Nov 2011

கிளிநொச்சியில் அமைந்துள்ள நாவல் நகர் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் நகரில் இருந்து மிகதொலையில் இராமநாதபுரத்தில் ஒரு கானகத்தை அண்டியதாக இருக்கின்றது. சுமார் 144குடும்பங்களை கொண்ட கிராமம் பல்வேறு தேவைகளுக்காக காத்திருக்கின்றது.
Posted on 19 Nov 2011

2011ம் ஆண்டில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் பிரதீபா பிரபா நல்லாசிரியர் நல்லதிபர் விருதுபெற்ற ஆசிரியர் அதிபர்களை இலண்டன் அகிலன் அறக்கட்டளை நிதியம் மற்றும் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய தலைவர் கோபாலகிருஸ்ணன் பா.உறுப்பினர் சிறிதரனின் வேண்டுகோளுக்கு இணங்க கௌரவித்து வருகின்றார்.
Posted on 19 Nov 2011

இன்று இலங்கையில் உள்ள நிலைமையை பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர்களையும் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தவர்களையும் தவிர்த்து மிகக் குறைந்தளவு வாக்காளர்களைப் பதிவு செய்வதன் ஊடாக மற்றுமொரு இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
Posted on 19 Nov 2011

மனித நாகரிகம் தெரியாதவர்கள் போன்று நடந்து கொள்ளும் இராணுவத்தினரின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
Posted on 19 Nov 2011

வாசிப்பினூடாகவே நமது பாரம்பரியம் தொன்மைபற்றிய அறிவு வளர்ந்து வந்திருக்கின்றது.அந்த அறிவினூடாகவே எமது இனத்தின் தனித்துவம் பேணுகின்ற எண்ணப்போக்கு அதற்கான முனைப்பு என்பன மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்
Posted on 19 Nov 2011

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது பெருமளவான மக்கள் படுகாயமடைந்து இடுப்பிற்கு கீழ் இயங்கமுடியாது படுத்த படுக்கையான நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து அவலப்படுகின்றனர். இவர்களில் மாற்றுவலுவுள்ளோர் சங்க தெரிவின்படி 10 பேருக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு சிறிதரன் பா.உ. ஆதரவில் கட்டில்கள் வழங்கியுள்ளது.
Posted on 06 Nov 2011


முல்லை வலயத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
Posted on 06 Nov 2011


சமகாலச் கல்விச் சாதனைகளே எதிர்கால தமிழினத்தின் சுய இருப்பிற்கு வழிகோலும். இவ்வாறு பின்தங்கிய பாடசாலைகளில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சி.சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
Posted on 06 Nov 2011


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்காக இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியுடைய ஒரு தொகுதி நூல்களை பா.உறுப்பினர் சி.சிறீதரன் பிரதேச சபையிடம் சம்பிரதாயமுறையில் கையளித்தார்.
Posted on 06 Nov 2011


புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 190 புள்ளிகளை பெற்று கிளி. புனித பற்றிமா றோ.க.பாடசாலை மாணவன் சத்தியசீலன் டர்சன் மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக வந்துள்ளார்.
Posted on 06 Nov 2011


வறுமை வளமின்மைகள் இருப்பினும் அதையும் தாண்டிப் படைக்கும் சாதனைக்கு சொந்தக்காரர்களாக நீங்கள் மாற வேண்டும். இவ்வாறு பரந்தன் அ.த.க.பாடசாலையில், கனடா வோட்டர்லூ குவல்ப் வட்டார தமிழ்ப் பாடசாலைகளின் உதவிகளை வழங்கி வைத்து பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
Posted on 06 Nov 2011

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

<< Previous 1 2 3 4 5 6 Next >>