இந்தியத் துணை ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு: கூட்டாட்சித் தீர்வும் மீனவர் பிரச்சினை குறித்தும் வலியுறுத்தல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள, தாஜ் சமுத்திரா விடுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்தியத் துணை ஜனாதிபதியைச் சந்தித்து ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துத் தீர்க்கமான கலந்துரையாடலை முன்னெடுத்தார். இதன் போது பல்வேறு முக்கிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 2009-ஆம் ஆண்டு […]
“விடுதலைப் போராட்ட வரலாறு வெறும் பதிவுகள் அல்ல; அது அடுத்த தலைமுறைக்கான புனித மரபு” சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

”எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய புனிதமான மரபு. எமது வரலாற்று நாயகர்களின் தியாகத் தடங்களை இளைய தலைமுறையிடம் சேர்ப்பது எமது தார்மீகக் கடமையாகும்.” என மலரும் புதுயுகம் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் […]
யாழில் தையிட்டி நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஓரணியில் திரண்ட தமிழ்த் தேசிய சக்திகள்!

தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று (15.04.2026) யாழ். தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. தையிட்டி நில உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தினர். கடந்த சனிக்கிழமை அமைச்சர் சந்திரசேகரன் அவர்களால் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு விடுவிக்கப்படும் […]
சந்திரகுமார் அணியுடன் இணைந்து பயணிக்க முடியாது: சிறீதரன் எம்.பி

நான் இன்றும் தமிழரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். என்னை யாரும் கட்சியில் இருந்து கலைக்கவில்லை. கலைத்தால் சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்று முடிவெடுப்பேன் எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டில் சந்திரகுமாருக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். உருவாக்கப்படும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் கூட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா என யாழில் நேற்று(15) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கைய இவ்வாறி கூறிய அவர் மேலும் […]
வடமராட்சியில் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு!

தாயகக் கலைஞர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் நினைவாக நடைபெற்ற ‘காலக்குரல்’ மாபெரும் பாடல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி தன்ஷிகா அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சி மண்ணில் சிறப்பாக நடைபெற்றது. உடுத்துறை மண்ணின் மைந்தனும், கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத் தலைவருமான திரு. இளையதம்பி விஜயசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடுத்துறை வடக்கு பாரதி […]
அறிவகத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான “அறிவகத்தில்” மலர்ந்திருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் மங்கலகரமாக நடைபெற்றது.
Delegation Meets Indian Deputy Consul on Neduntheevu Transport Crisis!

A delegation of public representatives met with the Indian Deputy Consul to discuss the ongoing transportation difficulties faced by the people of Neduntheevu. This important meeting was organized by Illankai Tamil Arasu Kachchi (ITAK) Member of Parliament Sivagnanam Shritharan, with the participation of the Indian Deputy Consul in Jaffna, Mr. Sai Murali, and a delegation […]
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பில் இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் குழு!

நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் திருமிகு சாய் முரளி அவர்களுக்கும் நெடுந்தீவுப் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், நெடுந்தீவுக்கான தற்போதைய போக்குவரத்துச் சேவைகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்பது தொடர்பாகப் பல்வேறு விடயங்கள் […]
புன்னைநீராவி விளையாட்டுக் கழக வீரர்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி!

புன்னைநீராவி விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும், கழக வீரர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இதன்போது, அபிவிருத்திப் பணிகள் மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் சமகால நிலவரங்கள் உள்ளிட்ட ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்து ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் (புன்னைநீராவி வட்டாரம்) செல்லத்துரை நிமலகாந், வட்டார அமைப்பாளர் திரு.முரளி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
Continued Repression and Land Seizures: Concerns Raised Over Tamil Rights Under Current Government

Yesterday (07), during the debates related to the government and the Central Bank, I wish to place on record that even after this government (NPP) assumed office, Tamil university students, Tamil public servants, and the Tamil people in this country continue to face various forms of pressure and hardships. Most importantly, on March 16, 2026, […]
அடக்குமுறைகளும் நில அபகரிப்பும் தொடர்கிறது: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி

இன்றைய தினம் அரசு தொடர்பான விவாதங்களிலும், மத்திய வங்கி தொடர்பான விவாதங்களிலும் மிக முக்கியமாக இந்த நாட்டிலே இந்த அரசு (NPP) பொறுப்பேற்ற பிற்பாடும் பலவிதமான நெருக்குதல்களையும், நெருக்கடிகளையும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும், தமிழ் உத்தியோகத்தர்களும் சந்திக்கிறார்கள் என்பதையும் தமிழ்மக்கள் சந்திக்கிறார்கள் என்பதையும் நான் இந்த இடத்திலே பதிவு செய்ய விரும்புகிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(07) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். […]
தீக்கதிர் அவர்களின் தந்தையாரது பூதவுடலுக்கு சிறீதரன் எம்.பி அஞ்சலி!

ஈழ விடுதலைப் போரியல் வரலாற்றின் இரண்டாவது கடற்கரும்புலி தீக்கதிர் அவர்களின் தந்தையாரது பூதவுடலுக்கு, கட்டைக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். இதன்போது, அருட்தந்தை வசந்தன் அடிகளார் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் கௌரவ உறுப்பினர் கௌரவ வீரபாகுதேவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.