யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அன்பளிப்பு

பாராளுமன்றப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

குறித்த தளபாடங்களின் உத்தியோகபூர்வக் கையளிப்பு நிகழ்வு நேற்று (18) பிற்பகல் நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இணைப்புச் செயலாளர் த.நடனேந்திரன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.லலீசனிடம் தளபாடங்களைச் சம்பிரதாய பூர்வமாகத் வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் தி.மகேஸ்வரகுமார், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் து.சுதர்சனா ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sri_neshan001
Leave a Reply