குழந்தைகளே! நேர்வழியில் செல்லுங்கள்

குழந்தைகளாகிய நீங்கள் நேர்வழியில் செல்லுங்கள் உங்களின் எதிர்காலம் சிறப்புற அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிராஞ்சி அ.த.க பாடசாலையின் சரஸ்வதி சிலை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான் இந்த சரஸ்வதித் தாயின் சிலையினை திறந்து வைப்பதையிட்டு பெருமிதம் அடைகின்றேன்.

சமூகத்தில் நல்ல பிரஜையாக உருவாகுவதற்கு கல்வி மிகவும் அவசியமானது. இன்றைய காலச் சூழ்நிலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மிகவும் கடினமாக உள்ளது.

ஏனெனில் இன்றைய காலம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பல புறச்சூழ்நிலை காராணமாக இடைவெளிகள் ஏற்பட்டுள்ளது.

இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதற்கு அப்பாலும் கூட ஒவ்வொரு மாணவர்களும் சமூகத்தில் நல்ல மனிதராக உருவாக வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாகவே ஆசிரியர்கள் உள்ளார்கள்.

தியாகங்கள் நிறைந்த இந்த மண்ணில் நல்ல கல்விமான்களாக வரவேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய ஆசை ஆகும். இதை நிறைவேற்றுபவர்களாக நீங்கள் மாறவேண்டும்.

இந்த பாடசாலையை பொறுத்தவரையில் உங்களுக்கு நல்ல அதிபர், ஆசிரிய வளம் உண்டு.

நீங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த மண்ணிலும் நல்ல சாதனையாளர்கள் உருவாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

sitharan_kilinochi002 sitharan_kilinochi004