இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன

23

இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, அருட்தந்தை பிராஸ்சிஸிசுடன் 56 முன்னாள் போராளிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதம நிதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.