உணவுத்தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, பிரதேச மக்கள், சனிக்கிழமை (11) முதல் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று (13-03-2017) முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, கவனயீர்ப்பு போராட்டத்தை 13 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பிரதேச மக்களில் இருவர் கடந்த  சனிக்கிழமை (11) முதல்; உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்
இன் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் .சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன்  வடமாகானசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர், அகல்வி அமைச்சர் த. குருகுலராசா
ஆகியோர் அங்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடிஇந்தப் போராட்டத்தை ;  கவனயீர்ப்பு போராட்டமாக தொடருமாறும் கேட்டுக்கொண்டனர் .
அதனையடுத்து, இந்த தீர்மானத்தை போராட்டக்காரர்கள் எடுத்துள்ளனர். கடந்த முதலாம் திகதி முதல் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (11) முதல், உணவுத் தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடைந்தது.
கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
13
14
15




Leave a Reply