கொட்டும் பனியிலும் கொழுத்தும் வெயிலும் அ ட்டைக்கடியிலும் எம் தேச வளர்ச்சிக்காக பாடுபடுவர்கள் மலையக தமிழ் உறவுகள்!

கொட்டும் பணியிலும் கொழுத்தும் வெயிலும் அட்டைக்கடியிலும் எம் தேச வளர்ச்சிக்காக பாடுபடுவர்கள் மலையக தமிழ் உறவுகள்

கிளிநொச்சியில் நேற்று மலைய உறவுகளின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் எமது பதிவுகளாக…

தொடர்ந்து உரையாற்றும் போது,

நாங்கள் இன்று எங்களுடைய மலையக உறவுகளின் உரிமைகளுக்காக இந்த இடத்தில் ஒன்று கூடி உள்ளோம்.

2009ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இந்த இடத்தில் மறைந்த கௌரவ அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஒர் அழகிய கலாசார மண்டபம் ஒன்று இருந்தது.

ஆனால் யுத்தத்திற்கு பின்னர் மகிந்த அரசு வேண்டும் எங்கள் மீதான இன அழிப்பின் ஓர் அங்கமாக இந்த கலாசார மண்டபத்தை அழித்துள்ளார்கள்.

இன்று மலையக உறவுகள் தங்களின் வாழ்க்கைக்கான படியாக ஆயிரம் ரூபா தருமாறு போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.

இவர்களால் தான் இந்த இலங்கைத்தீவு உலகத்தில் தனது பெயரை தடம்பதித்துள்ளது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ஏன் எனில் இங்கு உற்பத்தியாகும் இறப்பர் மற்றும் தேயிலை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் இதை கண்டுகொள்ளாமலும் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமலும் உள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தவர்களில் மலைய தமிழ் உறவுகளின் பங்கும் மிகப் பெரியது .

கடந்த முறை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் நாங்கள் இங்கிருந்து சென்று உதவிகள் அளித்தோம் அப்போதுதான் தெரியும் இவர்களுக்கு 7 பேர்ச் நிலம் கூட இல்லாமல் லயத்து வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

இவர்கள் இன்று இந்த அரசாங்கத்திடம் கேட்பது தங்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தி தாருங்கள் என்று. இதற்காகத்தான் போராட்டங்களை நடாத்துகின்றார்கள் இவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்த அரசும் சரி கடந்த அரசும் சரி தமிழ் பேசும் எங்களின் மீதான இன அழிப்புக்களை பல முனைப்புக்களில் மேற்கொள்கின்றது .

எனவே தான் இவர்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நாங்கள் தொடர்ந்து வீதிக்கு இறங்கி போராடுவோம் என்றார்.
Leave a Reply