மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடு

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றுத் தடத்தில் ஆயிரக்கனக்கான பாடல்களைப் பாடிய எழுச்சிப் பாடகராக விளங்கி நேற்று (26-02-2017)சாவடைந்த மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ள நாளை ; 28.02.2017 ம் திகதி செவ்வாய்க் கிழமை அன்றைய தினம் பகல் 11.00 மணிக்கு கிளிநொச்சி கண்ணன் கோவிலுக்கு முன்பாகவுள்ள பொது வளாகத்தில்; இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இறுதி வணக்க நிகழ்வுகளில் கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள், விவசாயப் பெருமக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என அனைவரையும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளை  அழைப்பு விடுத்துள்ளது.