கிளிநொச்சி இரணைமடு பாரிய நீா்ப்பாசன திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறப்பு .

கிளிநொச்சி இரணைமடு பாரிய நீா்ப்பாசன திட்ட முகாமைததுவ அலுவலகம்  09-02-2017 திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கோவிந்தன் கடைசந்தியில் அமைந்துள்ள மேற்படி அலுவலகம் இபாட் திட்டத்தின் இரணைமடு விவசாயிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  12.7  மில்லியன் ரூபா செலவில்  திட்ட முகாமைத்துவ அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது..

மேற்படி நிகழ்வில்  வடக்கு மாகாண விவசாய நீா்ப்பாசனத்துறை அமைச்சா்பொ. ஜங்கரநேசன்,பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன்  ஆகியோா்    அலுவலகத்தினை திறந்து  உத்தியோகபூா்வமாக திறந்து வைத்துள்ளனா்.

இரணைமடு திட்டப்பணிப்பாளரும், கிளிநொச்சி நீா்ப்பாசனத் திணைக்கள பிரதி பணிப்பாளருமான என். சுதாகரன்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளா் . திணைக்களங்களின் அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

IMG_2100 IMG_2102 IMG_2108 IMG_2113 IMG_2117 IMG_2129