கௌதாரிமுனை அ.த.கபாடசாலை மீள ஆரம்;பிக்குமாறு இப்பகுதி மாணவர்களின் பெற்றோர்கள்; கோரிக்கை விடுத்துள்ளனர்

26

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் யுத்தத்தினால் அழிவடைந்து இதுவரை மீள ஆரம்பிக்கப்;படாது காணப்படும் கௌதாரிமுனை அ.த.கபாடசாலை மீள ஆரம்;பிக்குமாறு இப்பகுதி மாணவர்களின் பெற்றோர்கள்; கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் சுமார் எண்பது வருடங்களுக்கும் மேலாக பழமைவாய்ந்த கௌதாரிமுனை அ.த.க பாடசாலை கடந்த 1991ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக செயலிழந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மக்கள் மீள்குடியேறி ஏழு ஆண்டுகளாகியும் குறித்த பாடசாலை இதுவரை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்பகுதியில் தற்போது நூற்று ஐம்பது வரையான குடும்பங்கள் வாழ்ந்;து வரும் நிலையில் இங்குள்ள பாடசாலை மாணவர்கள் அயல் கிராமத்தில் அமைந்துள்ள விநாசியோடை அ.த.க பாடசாலைக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அத்துடன் இக்கிராமத்திற்கான போக்குவரத்து சேவைகள் எவையும் இல்லாத நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே தரம் 10 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்கிய நிலையில் குறித்த பாடசாலை 1991ம் ஆண்டு செயலிழந்து போனது என்றும் தற்போது தரம் 5 வரையான வகுப்புக்களையாவது மீள ஆரம்பிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG_4360 IMG_4362 IMG_4366 IMG_4372