கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு அணைவரும் ஒன்றுபட வேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி வலய கல்வித்திணைக்களம் இணைந்து நடாத்திய உலக ஆசிரியர் தின விழா இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மன்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி கலாசார அபிவிருத்தி அமைத்தியத்தின் தலைவர் குமாரசிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தமது உரையில் இன்று இந்த இடத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த இடத்தில் நின்று பேசுவதற்கு என்னை நல்வழிப்படுத்திய ஆசிரியர்கள் தான் பிரதான காரணம்.

உண்மையில் ஆசிரியர்கள் தங்கள் உழைப்புக்குரிய ஊதியத்திற்கு அப்பால் ஒவ்வொரு மாணவனும் சமூகத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் கல்வி கற்பிக்கின்றார்கள் அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

விடுதலைப்போராட்ட காலத்தில் எங்களுடைய மாவட்டத்தின் கல்வி நிலையை சற்று உற்று நோக்கும் போது முன்நோக்கிய நிலையில் இருந்தது.

இதற்கான காரணங்களாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு நிலை இருந்தது அதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பும் பெரும் பங்காக இருந்தது.

ஆனால் இன்று பல்வேறு சமூகக்காரணிகளாலும் புறக்காராணிகளாலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் இருந்த ஆரோக்கியமான உறவு நிலை விரிசலடைந்துள்ளது.

இதனால் ஆசிரியர்களது நல்வழிப்படுத்தும் செய்பாடுகளுக்கு மாணவர்கள் மதிப்பளித்து செயற்படுதல் குறைவாக காணப்படுகின்றது.

இன்றைய சமூகமும் இதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இதனாலேயே மாணவர்களின் கல்வி நிலையில் விழ்ச்சி காணப்படுகின்றது.

இந்த நிலையை கல்விச்சமூகம் மட்டும் தனித்து நின்று மாற்றமுடியாது மாவட்டத்தின் ஒட்டு மொத்த சமூகத்தினரும் தமது சிறார்கள் ஆரோக்கியமான கல்வியினையும், சிறந்த நல்லொழுக்கத்தினையும் பேணுவதற்காக இதயசுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும்.

யுத்தத்தின் பின்னர் எங்களுடைய மாவட்டத்தின் கல்வி நிலையில் பின்னடைவு ஏற்றபட்டதை நன்கு அவதானித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்,

இந்த மாவட்டத்தின் கல்வி நிலையை முன்னோக்கி நகர்த்துவதற்கு அரசியல் எதிர்பார்ப்புக்களுக்கு அப்பால் கல்வி கலாசார அபிவிருத்தி அமையம் உருவாக்கப்படவேண்டியது மிக அவசியமானது என்ற சிந்தனையை வெளிப்படுத்தினார்

இவரின் உயரிய சிந்தனையை கருத்தில் கொண்டு மிக அண்மையில் எம்மால் இந்த கல்வி கலாசார அபிவிருத்தி அமையம் உருவாக்கப்பட்டு தடம் பதித்துள்ளது.

நாங்கள் இனிவரும் காலங்களில் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியில் கல்வியலாளர்கள் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு மிகவும் உறுதுனையாக இருப்பதோடு அவர்களுடன் இணைந்து செயற்படவும் தயாராகவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.kili_teacher_day001

kili_teacher_day002

kili_teacher_day003

kili_teacher_day004

kili_teacher_day005