வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் கட்டடம் முதலமைச்சர் தலைமையில் திறப்பு

31

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பாடசாலை கட்டடத்திறப்பு நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, நெற்களஞ்சியசாலை கட்டிடங்கள் இரண்டில் இயங்கிய வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலையானது தற்போது அனைத்து சமூக நலன்விரும்பிகளின் உதவியுடன் புதுப்பொழிவு பெற்று வருகிறது என அந்த பாடசாலையின் அதிபர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரத்தினம், பசுபதிபிள்ளை, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல் மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
IMG_1430

IMG_1433

IMG_1445

IMG_1453

IMG_1463

IMG_1473