கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரன்விஜயம்

28

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரன் அவர்கள் பாராளமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களுடன் சென்று பாடசாலையின் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் அதிக மாணவர்; தொகையைக்கொண்ட நான்காவது பாடசாலையாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மாணவர்களைக்கொண்ட முதல் நிலைப்பாடசாலையாகக்காணப்படுகின்ற கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவிற்குரிய காணி படையினரின் பயன்பாட்டில் இ ருந்து வருகின்றது. இந்நிலையில் குறித்த பாடசாலை போதிய இடவசதிகள் இன்றி இயங்கி வருகின்றது.

இந்நிலையில் இன்று (02-02-2017) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள் பகல் 11.00 மணிக்கு கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்குச்சென்று நிலமைகளைப்பார்வையிட்டதுடன் அதிபர் அவர்களுடனும் கலந்துரையாடியதுடன் பாடசாலைக்குச்சொந்தமான இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள காணியைச் சென்றும் பார்வையிட்டுள்ளார்.

குறித்த காணி விடயம் தொடர்பில் தன்னாலான முயற்சிகளை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவிற்கென முன்னர் ஒதுக்கப்பட்ட கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட குறித்த காணி கடந்த 2009ம் ஆண்டிற்குப்பினர் இராணுவத்தினரின் பயன’பாட்டில் இருந்து வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் நல்லாட்சி அரசின் இரண்டு ஆண்டைக்குறிக்கும் வகையில் குறித்த காணியை விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை அந்தக்காணி விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
IMG_5164

IMG_5165

IMG_5174

IMG_5179

IMG_5195

IMG_5196

IMG_5197