தனி மனித ஆளுமையும் மக்கள் சேவையும் கொண்ட ஒரு மனிதனாக நாட்டுப்பாற்றாளர் பொன்.விநாயகமூர்ததி வாழ்நாளில் அழப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார்

கிளிநொச்சி மண்ணில் தனி மனித ஆளுமையும் மக்கள் சேவையும் கொண்ட ஒரு மனிதனாக நாட்டுப்பாற்றாளர் பொன்.விநாயகமூர்ததி வாழ்நாளில் அழப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார்

கிளிநொச்சியில் பல்வேறு சமுக பணிகளையும் மக்கள் சேவைகளையும் ஆற்றி இயற்கை எய்திய பொன். விநாயகமூர்த்திமற்றும் யுத்தத்தின் போது உயிரிழந்த அவரது மகன் சந்துரு ஆகியோர் நினைவாக அவரது குடும்பத்தினரால் ஏ-9 வீதி கிளிநொச்சி பழைய வைத்தியசாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம்  (01-02-2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளநொச்சி மாவட்டம் என்ற வரலாற்றில் குருகுலபிதா அப்புஜி தம்பிராஜா போதகர் மதுரநாயகம் அடிகளார்; யோகர் சுவாமிகள் கட்சின் அம்மையார் ஆகியோரை பார்க்கின்றது போன்று சமுக சேவைகளையும் மக்கள் சேவையும் நிறைந்த மனிதாக வாழ்ந்த விநாயகமூர்த்தி அண்ணனின் வரலாறும் அமையவேண்டும்.

பல்வேறு நிறுவனங்களில் இருந்தார் என்பதை  இந்த மாவட்டம் என்ற சிந்தனையின் தனித்துவமாக வாழ்ந்தவர் பூநகரி மண்ணில் பிறந்து கிளநொச்சி மண்ணில் தனித்துவமான அடையாளங்களோடு மாவட்டம் பற்றிய சிந்தனைகளை கொண்டிருந்தார். தான் வாழ்ந்த பிரதேசத்தில் தன்னுடைய மாவட்டத்திற்காக கடுமையாக உழைத்தவர் கிளநொச்சி மாவட்டம் என்பது தனிமாவட்டமாக வரவேண்டும் என்பதற்காக உழைத்து அதனை தனிமாவட்டமாக மாற்றிய பெருமைக்குரிய ஒரு மனிதர் திரு.வீ.ஆனந்தசங்கரி ஐயா அவர்கள் அந்த நேரத்தில் அவருக்கு உதவியவர்களில் பொன் விநாயகவுமூர்த்தி மற்றும் கிருஸ்ணராஜா அண்ணர் தங்களுடைய பணிகளையும் செய்துள்ளனர்.

பொன் விநாயகமூர்த்தி அவர்கள் இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளையின் செயலாளர் மற்றும்  ஏனைய மாவட்டத்தின் சேவைகளை வழங்கி 21 அமைப்புக்களில் இணைந்து தனது சேவைகளை வழங்கியிருக்கின்றார். அதேபோன்று கிளிநொச்சி மாவட்ட கல்வி நிதியத்தை ஆரம்பிக்க முன்னின்று செயற்பட்டவர்.

அவருடைய சிந்தனையில் உருவான இந்த நிதியம் மூலம் பெருமளவான வறிய மாணவர்கள் நன்மைகளை பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவருடைய சேவையை தனி மனித ஆளுமையை என்றும் மறக்கமுடியாது அவரை பற்றியும் அவரது சேவை பற்றியும் அடுக்கிக்கொண்டே போக முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். வட்டக்கச்சி ஆரம்பவித்தியாவயத்தின் அதிபர் அ.பங்கையன் செல்வன் தலைமையில்நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலவன் சு.சிறில் மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை முன்னாள் கரைச்சிப்பிரதேச சபையின் தலைவர் நாவை.குகராஜா மற்;றும் உறவினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

IMG20170201103003

IMG20170201103030 (1)

IMG20170201103030