ஆசிரியர்கள் தாம் வாழ்ந்து காட்டுவதன் ஊடாகவே மாணவர்களை வழிப்படுத்த முடியும்.

வடக்கு கிழக்கு தமிழ் உறவுகளுடன் மலையக மைந்தர்கள் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு ஆசிரிய பயிற்சி வழிசமைக்கின்றது.

இதனால் ஒருங்கிணைந்த தமிழர் நிலம் என்ற உணர்வை நாம் அனைவரும் உருவாக்கிக் கொள்ள முடியும் .

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 01.02.2017 காலை கலாசாலை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர்களுடைய நடை உடை பாவனைகளை மாணவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இதனால் அவர்கள் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் முன்மாதிரியானவர்களாகத் திகழ வேண்டும். அவர்களுடைய உடுபுடைவைகளில் இருந்து அலங்காரக் கோலங்கள் வரை சமூக ஒழுக்க நெறிக்கு உட்பட்டதாக விளங்க வேண்டும்.

இன்று மாணவர்களை நல்வழிப்படுத்துகின்றோம் எனத் தண்டனை வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. பல்வேறு அமைப்புக்கள் தண்டனைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு கண்ணும் கருத்துமாக உள்ளனர். எனவே ஆசிரியர்கள் தாம் வாழ்ந்து காட்டுவதன் ஊடாகவே மாணவர்களை வழிப்படுத்த முடியும்.

கல்வித் துறையில் பல சவால்கள் காணப்படுகின்றன. கடமை நிறைவேற்று அதிபர்களுடைய பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடாக இல்லை. அது குறித்துத் தனிநபர் பிரேரணை ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன். இதே வேளை ஆறாயிரம் ரூபா உதவித்தொகையை வேதனமாகப் பெற்று கல்வி பயிலும் ஆசிரிய உதவியாளர்களாகிய உங்கள் கஷ்டங்களையும் நான் அறிவேன். உங்கள் வேதனத்தை அதிகரித்து வழங்குவது தொடர்பான பிரேரணை ஒன்றையும் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளேன்.

யாழ். மண்ணில் கல்வி பெறுவது சிறந்த ஓர் அனுபவம். வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுடன் மலையக மக்கள் தங்கள் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர் என்ற உணர்வுடன் எங்கள் வாழ்வை உயர்த்துவதற்கு எங்களுள் ஒற்றுமை அவசியமானது. இதற்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் மலையக ஆசிரியர்கள் பெறும் கலாசாலை பயிற்சி உதவ வேண்டும்.
நிகழ்வில்; சிறப்பு விருந்தினராக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளருமாகிய சரா.புவனேஸ்வரன் கலந்து கொண்டனர்.

விருந்தினர்களுடன் கலாசாலையில் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை, பிரதி அதிபர் ச.லலீசன் ஆகியோர் வெற்றி பெற்றோருக்கான கேடயங்களை வழங்கிக் கௌரவித்தனர்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

 

14

 

15

16

17

18

19