ஊற்றுப்புலம் அ.த.க பாடசாலைக்கு மேலைத்தேய வாத்திய இசைக்கருவிகள் கையளிப்பு.

பாராளுமன்ற உறுப்பனர் சிவஞானம் சிறீதரனின் 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மேலைத்தேய வாத்திய இசைக்கருவிகள் கையளிக்கும் நிகழ்வும் கன்னி இசை அணிவகுப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் நேற்று பாடசாலை அதிபர் மகேசன் உமாசங்கர் தலைமையில் காலை நடைபெற்றது.

பாடசாலையின் முன்னாள் அமைந்திருக்கும் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று குறித்த இசைக்கருவிகளை மாணவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை முன்றிலில் இருந்து இசை அணி வகுப்பு மாணவர்கள் கன்னி இசை அணிவகுப்புடன் விருந்தினர்கள் பாடசாலை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கட்சியின் ஊற்றுப்புல அமைப்பாளர் சுரேன், மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள், ஊற்றுப்புல கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.
Leave a Reply