மாவட்ட விசேட ஒருகினைப்புக்குழுக்கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இணைத்தலைவர்களான வடக்கு பதில் முதலமைச்சர் ஜங்கரநேசன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையில் காலை9.30 மணிக்கு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பான விசேட கூட்டத்தில்
கிளிநொச்சி மாவட்டம் உட்பட நாட்டின் அணைத்து மாவட்டங்களில் ஏற்பட்டு இருக்கும் வறட்சி நிலை தொடர்பில் ஆராயப்பட்டது .
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சி நிலை தொடருமாயின் குடிநீர் மற்றும் மின்சாரம் வேலை வாய்ப்பு போன்ற பலவற்றில் தாக்கங்கள் ஏற்படும் இதனை தவிர்ப்பதற்கு துறைசார்ந்த அணைத்து தினைக்கள தலைவர்கள் உத்தியோகத்தர்கள் எல்லோரும் கூட்டு பெறுப்புடன் செய்பட்ட வேண்டும் என்றும் இங்கு கலந்துரையாட்டப்பட்டது.
குறித்த இந்த விசேட ஒருங்கினைப்புக்குழுக்கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான அரியரத்தினம் பசுபதிப்பிள்ளை தவநாதன் மற்றும் கரைச்சி கண்டாவளை புநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலளர்கள் தினைக்களத்தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.