இரணைமடுவில் மழை வேண்டி குடைபிடித்து வழிபாடு

26

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கா் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனா்.

இன்று ஞாயிறு காலை இரணைமடு குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்து அங்கு வழிபாடுகளிலம் ஈடுப்பட்டனா்.

இதில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன்,வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதிபிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவா் வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சி பிராந்திய பிரதி நீா்ப்பாசன பணிப்பாளா் எந்திரி சுதாகரன் கமக்கார அமைப்புகளின் சம்மேளனத் தலைவா் சிவமோகன், விவசாயிகள் என பலா் கலந்துகொண்டனா்

அத்துடன் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 97 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரணமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனமும் ,விவசாயப்பெருமக்களும் இனணந்து கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 97 பானைகளில் பொங்கி சிறப்பு வழிபாடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

kanakaampikai (1) kanakaampikai (1) kanakaampikai (2) kanakaampikai (2) kanakaampikai (3) kanakaampikai (3) kanakaampikai (4) kanakaampikai (4) kanakaampikai (5) kanakaampikai (5) kanakaampikai (6) kanakaampikai (7) kanakaampikai (8) kanakaampikai (9) kanakaampikai (10) kanakaampikai (11) kanakaampikai (12) kanakaampikai (13) kanakaampikai (14) kanakaampikai (15)