கிளிநொச்சியில் இன்று-தைத்திருநாள் வீதியோட்ட போட்டி

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன் விருத்தி கழகம் ஏற்பாடு செய்திருந்த வீதியோட்ட போட்டி இன்று கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது.
இளைஞர் திறன் விருத்தி கழகத்தின் தலைவர் சுரேன் தலைமையில் காலை 6.30 மணிக்கு ஆண்களுக்கான வீதியோட்ட போட்டியை இயக்கச்சி சந்தியில் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்பாசன பணிப்பாளர் சுதாகரன் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார் . பெண்களுக்கான வீதியோட்ட போட்டியினை பச்சிலைப்பள்ளி உதவிபிரதேச செயலாளர் சதீஸ்கரன் தட்டுவன்கொட்டி சந்தியில் வைத்து ஆரம்பித்து வைத்தார் போட்டியின் நூற்றுக்கு மேற்பட்ட வீர வீராங்கனைகள் யு-09 வீத ஊடாக முடிவிடமான கிளிநொச்சி கந்தசாமிகோவில் வரை சென்றடைந்தனர். அதனை தொடர்நது கந்தசாமி கோவில் வளாகத்தில் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இளைஞர் திறன் விருத்தி கழகத்தின் செயலாளர் புருசோத்மன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்பாசன பணிப்பாளர் சுதாகரன் பளை பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமேதாயன் கரைச்சி பிரதேச செயலாளர் திரு கோ. நாகேஸ்வரன் இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜி.மோகனதாஸ் ஆகியோர் வணக்கத்திற்குரிய ஜெகதீஸ்வர குருக்கள் வணபிதா அருட்தந்தை ஜோர்ச் துரைரட்டணம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர்.
இந்த வீதியோட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் உருத்திரபுரத்தை சேர்ந்த இ. அனுயன்இ பா. விதுசன்; 1ம்; 2ம் இடத்தினையும் கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த தே. அன்ரனிடெல்மன் 3ம் இடத்தினையும் பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தினை கிளிநொச்சி இரத்தினபுரத்தினை சேர்ந்த தே. டென்சிகாவும் இரண்டாம் இடத்தினை உதயநகர் மேற்கை சேர்ந்த ஜெ.சுருதிகாவும் 3ம் இடத்தினை இரத்தினபுரத்தை சேர்ந்த வ. அனுகாவும் பெற்றுக்கொண்டனர். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் அரச அதிகாரிகள் விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் சமுக அமைப்பின் பிரதிநிதிகள் விளையாட்டு ஆர்;வலர்கள் விளையாட்டு வீரர்கள் எனப்பலர்கலந்து சிறப்பித்தனர்