முக்கொம்பன் பாடசாலைக்கான புதிய கட்டடத் தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் பாடசாலைக்கான புதிய கட்டடத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனினால் இன்று (11) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திலீபன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில், முன்னதாக விருந்தினர்கள் முக்கொம்பன் கற்குழி காளி அம்மன் ஆலயத்தில் இருந்து வரவேற்க்கப்பட்டு பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாடசாலையின் பழைய மாணவன் நிசாந்தனினால் ரூபா 54500 பெறுமதியில் அமைக்கபட்ட பாடசாலையின் பெயர்பலகை கிளிநொச்சி வலயக்கல்வி அலுவர் க. முருகவேலினால் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்து வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சினால் அறுபது இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட பாடசாலையின் புதிய கட்டடத்தொகுதியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கபட்டது.

தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றதுடன் பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

முதலில் சிரேஸ்ட மாணவத் தலைவனுக்கான சின்னத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சூட்டிவைக்க ஏனைய மாணவத் தலைவர்களுக்கான சின்னத்தினை ஏனைய விருந்தினர்கள் சூட்டினர்கள்.

இந்நிகழ்வில்,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலர் க. முருகவேல் மற்றும் உலக உணவுத்திட்ட அலுவலர், மற்றும் பாடசாலை அதிபர்கள், முக்கொம்பன் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

986 o0

 

 

 

tu