கிளிநொச்சி வலயக்கல்விப்பணிமனையின் நீண்டகாலக்குறைபாடாக விளங்கி வந்த ஆசிரிய வள நிலையத்திற்கான இரண்டு மாடிக்கட்டத்திற்கு இன்று நண்பகல் அத்திபாரம் இடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
1900 ஆசிரிய ஆளணியை கொண்ட கிளிநொச்சி கல்வி வலயத்திற்கான இக்கட்டத்தின் ஆரம்பபணிகள் அக்கராஜன் மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகில் இன்று நண்பகல் 12. மணிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது சுமார் 28 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடிக்கட்டடமாக இது அமையவுள்ளது.
இவ்வள நிலையத்தை அமைப்பதற்காக பல்வேறு தரப்பினருடைய அபிப்பிராயங்கள் பெறப்பட்டு தூரநோக்குடைய மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியைகருத்தில் கொண்டு அக்கராஜன் பிரதேசத்தில் இவ்வளநிலையத்தினை அமைக்க வேண்டும் என கல்வி இராஜங்க அமைச்சர் இராதாகிருஸ்னன் அவர்களின் கவனத்திற்கு பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களினால் எடுத்து செல்லப்பட்டதை அடுத்து இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளார் முருகவேல் மாகாண திட்ட பொறியியளார் விகிர்தன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அமிர்தலிங்கம் பாடசாலை அதிபர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆசிரிய வளநிலைய பொறுப்பதிகாரி கேசவன் மற்றும் அக்கராஜன் பிரதேச அமைப்பாளர் கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்