பிட்டு,வடை குறித்து நாடாளுமன்றத்தில் இரு வரலாற்றுக் கதைகளைக் கூறிய சிறீதரன் எம்.பி

222

தமிழர்களின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்டையும், வடையையும் வைத்து நாடாளுமன்றில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வரலாற்றுக்கதைகள் இரண்டைக் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் வாழ்வில் பிட்டு என்பது பாரம்பரியமான உணவாகும். பாரம்பரியத்தை ஒரு பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் தரக்குறைவாக பேசியிருப்பது அவரது விஷமத்தனமான போக்கை காண்பிக்கின்றது.இனவாத ரீதியான போக்கையும் காண்பிக்கின்றது.

தமிழர்களின் பாரம்பரியத்தைக் கூறும் திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமானே பிட்டுக்கு மண் சுமந்ததாக பிட்டின் பாரம்பரியம் சொல்லப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.