சிறீதரன் எம்.பியின் கோரிக்கைக்கு அமைவாக வட்டக்கச்சி விவசாயப் பண்ணையை விடுவிப்பதாக விவசாய அமைச்சர் உறுதி!

173

மீள்குடியேற்றம் நடைபெற்று பத்து ஆண்டுகள் கடந்தும் வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை விடுவிக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று பாராளுமன்ற குழு அறையில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பசளை மானியம் வழங்கப்படுவதைப் போல், இயற்கை உரங்களை பயன்படுத்தி சேதன விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அந்த விவசாயிகளுக்கும் மானிய அடிப்படையிலான உதவித்திட்டம் ஒன்றை வழங்க வேண்டுமென்றும் சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையும் கமத்தொழில் அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டதோடு, அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

https://fb.watch/25NeWaBhMY/