முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!

408

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுடர் ஏற்றப்பட்டு முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் நெருக்கடிக்கு மத்தியில் தடை உத்தரவு ஏதும் இன்றி நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.