சிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை! யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்!!

47

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதியின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் கொரோனா தொற்றுக்குள்ளானதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

சிவஞானம் சிறிதரன் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து யாழ் போதனா வைத்தியசாலையை தொடர்பு கொண்டு வினவிய போது சிறிதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.

இவர் அண்மையில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தார்.

அந்நாட்டில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.