இந்திராபுரம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள அன்மையில் மீள்குடியேறற்றம் செய்யப்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பிலும் கவனம் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளர்.

கடந்த 2009ம் ஆண்டு முதல் வெடி பொருட்கள் அகற்றப்படாது மிக ஆபத்தான பகுதியாக காணப்படுகின்ற முகாமாலை பிரதேசத்தின் இந்திரபுரம் கிராமம் அண்மையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த பதினாறு வருடங்களான வெடிபொருள் ஆபத்தான பகுதியாக காணப்பட்டு குறித்த கிராமம் மீள்குடியேற்றதிற்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பகுதி மக்கள் மீள்குடியேறி உள்ளனர்.

இவர்களுடைய தேவைகள் குறித்தும் அந்த மக்களின் உடைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் அண்மையில் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அவர்களது வீட்டுத்திட்டம் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளட்ட அடிப்படைப்பிரச்சனைகள் தொடர்பிலும் கவணம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த களத்தரிசிப்பின் போது கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் வேழமாலிகிதன் இளைஞர் அணித்தலைவர் சுரேன் கட்சியின் பிரதேச அமைப்பளார் கஜன் கட்சியின் பளைப்பிரதேச செயற்பாட்டாளர்கள் கிராம சேவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

20161215_085843 20161215_085931 20161215_090300 20161215_090308 20161215_090421 20161215_090736 20161215_091056 20161215_091342 20161215_091352 20161215_091632 20161215_093838 20161215_093846 20161215_093906 20161215_094049 20161215_095409 20161215_095426