பண்முக படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிப் பொருட்கள் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் பண்முக படுத்தப்பட்ட நிதி ஊடாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு உதவிகள் கையளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் 2016ம் ஆண்டு பன்முகபடுத்தப்பட்ட நிதி ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களான, விளையாட்டு உபகரணங்கள் ,இசைக்கருவிகள் ,போட்டோ பிரதி இயந்திரம் ,கதிரைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினரின் சிவஞானம் சிறீதரன் அவர்களால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட 2.1 மில்லியன் ரூபா நிதியில் 1.1மில்லியன் ரூபா கட்டுமான வேலைத்திட்டங்களுக்காவும் 1.0மில்லியன் ரூபா செலவில் உபகரணங்கள் கொள்வனவிற்காகவும் பயன்படுத்தப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் வேழமாலிகிதன் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பிரதேச செயலக கணக்களார் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
dsc_0007

dsc_0009

dsc_0015

dsc_0017

dsc_0020

dsc_0022

dsc_0024