சிறீதரன் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் வேலணை வடக்கு மக்களுக்கான குடிநீர் குழாய் இணைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் 8 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் வேலணை வடக்குப் பிரதேச மக்களுக்கான குடிநீரினை வழங்கும் நோக்கில் இன்றைய தினம் குடிநீர் இணைப்புக் குழாய்களை பொருத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

அதனை இன்றைய தினம் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ அசோக்குமார் அவர்கள் பார்வையிட்டார்.
இதன் போது கருத்துக்கூறிய ஊர் மக்கள் இவ் குடிநீர் குழாய் இணைப்பு காரணமாக பெருமளவான மக்கள் பயனடைய இருக்கிறார்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

எம் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய அருமைநாயகம் மாஸ்ரர் அவர்கள் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ அசோக்குமார் அவர்களிடம் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றதையடுத்து இச் செயற்பாடானது சாத்தியமாகி நடமுறைக்கு வந்துள்ளது.