வரணி இடைக்குறிச்சி அ.த.க பாடசாலை மாணவர்களின் நலன் கருதி திறன் வகுப்பறைக்கு நிதி ஒதுக்கீடு!

71

வரணி இடைக்குறிச்சி அ.த.க பாடசாலை பாடசாலை கல்வி சமூகத்தின் அழைப்பையேற்று அன்மையில் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் பாடசாலையின் வளக்குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

அத்தோடு பாடசாலை மாணவர்களின் நலன் கருதி திறன் வகுப்பறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.சுரேன், சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் செ.மயூரன் மற்றும் கௌரவ உறுப்பினர்களான த.றமேஸ், கி.வீராவாகு தேவர் ஆகியோருடன் பாடசாலையின் அதிபர், பெற்றோர் மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு பாடசாலையின் அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக ஆய்வு செய்தனர்.