94 இலட்சம் நிதி மண்கும்பானின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கீடு!

47

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் தீவகத்தின் ஊர் எழுச்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மண்கும்பான் பிரதேசத்தில் 3 வீதிகளின் புனரமைப்புக்கென 60 இலட்சம் (6 மில்லியன்) ரூபாவும், 3 ஆலயங்களின் புனரமைப்புக்கென 9 இலட்சம் (0.9 மில்லியன்) ரூபாவும், ஒரு குளம் புனரமைப்புக்கென 10 இலட்சத்து 20 ஆயிரம் (1.02 மில்லியன்) ரூபாவும், ஒரு பாடசாலை பூங்கா புனரமைப்புக்கென 5 இலட்சம் (0.5 மில்லியன்) ரூபாவும், ஒரு பாடசாலை மைதான புனரமைப்புக்கென 5 இலட்சம் (0.5 மில்லியன்) ரூபாவுமாக மொத்தமாக 10 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 94 இலட்சத்து 20 ஆயிரம் (9.42 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

நிதி ஒதுக்கப்பட்ட வீதிகள்…
1) சோனகன்காட்டு வீதி புரனமைப்பு (20 இலட்சம்)
2) சிவகாமி அம்மன் தெற்கு வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
3) மண்கும்பான் பாடசாலை வீதி புனரமைப்பு (20 இலட்சம்)

நிதி ஒதுக்கப்பட்ட பாடசாலை…
1) மண்கும்பான் அ.தா.க பாடசாலை சிறுவர் பூங்கா அமைத்தல் (5 இலட்சம்)

நிதி ஒதுக்கப்பட்ட ஆலயங்கள், பள்ளிவாசல்…
1) சிவகாமி அம்மன் ஆலயப் புனரமைப்பு (3 இலட்சம்)
2) கறுப்பாத்தி அம்மன் ஆலயப் புனரமைப்பு (3 இலட்சம்)
3) வெள்ளைப்புற்றடி விநாயகர் ஆலயப் புனரமைப்பு (3 இலட்சம்)
4) ஜிம்மா பள்ளிவாசல் புரணமைப்பு (5 இலட்சம்)

நிதி ஒதுக்கப்பட்ட குளம்…
1) மண்கும்பான் உப்புக்குளம் புனரமைப்பு (10.2 இலட்சம்)

மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி…
1) மண்கும்பான் அ.தா.க பாடசாலை மைதான புனரமைப்பு (5 இலட்சம்)

இவ்வாறு 10 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 94 இலட்சத்து 20 ஆயிரம் (9.02 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இதில் பல வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன சில வேலைத்திட்டங்கள் தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன…