கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு!

21

கிளிநொச்சி – கனகபுரம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் இதனை திறந்து வைத்துள்ளார்.

கிளிநொச்சி கல்வி வயலத்திற்குட்பட்ட கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற 2016 முதல் 2020 வரையான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலைத்திற்கான புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் ஜோன் குயினரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்விச் சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.