வட்டக்கச்சி ஆயுர் வேத வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு

கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆயுர் வேத வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி மற்றும் கரைச்சி பிரதேச சபை நிதி என்பவற்றின் கீழ் சுமார் 5.99 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திறப்பு விழா தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தினை திறந்து வைத்துள்ளார்.

இதில் கிளிநொச்சி மாவட்ட ஆயர் வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் வே.சிவநேசன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் ஆணையாளர் பெர். நித்தியானந்தம் மற்றும் சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.