சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் ஆலய அபிவிருத்தி பணி!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளியில் பதிவுசெய்யப்பட்ட ஆலய நிர்வாகங்களை சந்தித்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பளை கோட்ட அரசியல் பணிமனை தாயகத்தில் இந்த கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஆலய அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஒதுக்கீட்டில் நிதி வழங்கப்படும் எனவும் சுரேன் உறுதியளித்துள்ளார்.

ஆலய அபிவிருத்தி தொடர்பாகவும், ஏனைய தமிழ் பண்பாட்டியலை பேணுவதில் ஆலயங்களின் பங்கு தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.