மகிந்தவிடம் சரணடைந்த வியாழேந்திரன்!

28

துரோகங்களின் வரலாறுகள் படிப்படியாக இப்படியே உருவாக்கப்பட்டு கொண்டு போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையில், மகிந்த மற்றும் ரணில் தரப்பு நாடாளுமன்றில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இதனால், தற்போது கட்சி தாவல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றd.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் மகிந்த அணிக்கு கட்சி தாவினார்.

அத்துடன், பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,

“இது போன்ற ஒரு சம்பவம் 1977ம் ஆண்டு காலப்பகுதியிலும் நடந்திருந்தது. தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்து ஒருவர் இவ்வாறு வெளியேறியிருந்தார். அது போன்ற ஒரு செயற்பாட்டை வியாழேந்திரன் செய்துள்ளார்.

முன்னர் கருணா இப்படியான நடவடிக்கையினை செய்திருந்தார். தற்போது வியாழேந்திரன் செய்துள்ளார்.

இப்படியாக தமிழரின் துரோக வரலாறுகள் படிப்படியாக உருவாக்கப்பட்டு கொண்டு போவதாக” அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.