கண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பிரதேச செலயத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் இவ்வாண்டுக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த இக்கூட்டத்தில் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மீளாய்வுகள் மற்றும் இவ்வாண்டு முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு திட்டங்கள் உள்ளிட்டபல்வேறு விடயங்கள் ஆராயப்;பட்டுள்ளன.

இன்றைய இக்கூட்டத்தில் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், வை.தவநாதன் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள்

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.