பொறியியலாளராக வந்து எனது பிரதேசத்தை உயர்த்துவதே என் இலட்சியம் கிளிநொச்சி மலையாளபுரத்தின் முதல் 9A மாணவி மு.மேனகா!

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் கிளி/புனித திரேசா பெண்கள் கல்லூரியில் மலையாளபுரத்தை சேர்ந்த மாணவி முருகையா மேனகா 9A என்ற பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கும் தனது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் அது மட்டுமன்றி இவர் கிராமத்திற்கு முதலாவது 9A எனும் சித்தி பெற்று பெருமை சேர்த்துள்ளார்

வறுமையிலும் கல்வி பயின்ற இம் மாணவியின் வீட்டிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவரது கல்வி நிலைகளை கேட்டறிந்து அவர் பொறியியலாளராக வர வேண்டும் எனும் இலட்சியப் பாதை நிறைவேற வேண்டும் இதேவேளை மேனகாவின் சிறந்த பெறுபேற்றுக்கு வழிகாட்டிய பெற்றோர், பாடசாலை ஆசிாியா்களுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தொிவித்தார்

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடன் மாகாண சபை உறுப்பினர் அ.பசுபதிப்பிள்ளை அவர்களும் கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் க.கிரிகரன் அவர்களும் பாராட்டுகளையும் கூறி மாணவியின் கல்வி வளர்ச்சிக்கு இதர உதவிக் கரம் கொடுப்பதாக கூறினர்.