மாகாண அதிகார வரம்பிற்குள் தலையீடு செய்யும் வடக்கு ஆளுனர்

அண்மையில் கௌதாரிமுனை மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொண்டுவந்ததை அடுத்து அப்பகுதிக்கு பூநகரி பிரதேச செயலாளருடன் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது எமது பதிவுகளாக…

இந்த பூநகரி பிரதேசம் பல தொன்மை வரலாறுகளை கொண்டது. குறிப்பாக பூநகரி கோட்டை மண்ணித்தலை சோழர் கால சிவன் கோவில் என்று கூறிக்கொண்டு போகலாம்.

நீங்கள் இருக்கும் இந்த கௌதாரிமுனைப் பகுதியும் கூட தமிழர்களின் தொன்மை வரலாற்றை கொண்டு காணப்படுகின்றது.

ஆனால் இன்று இந்த வரலாறுகளை முழுமையாக இல்லாமல் ஆக்குவதற்கு பல முனைப்புக்களில் பலர் பல முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் பொன்னவெளிப்பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் முருகற் பாறை அகழ்விற்கு வந்தார்கள் நாங்கள் அதனை தடுத்து நிறுத்தினோம்.

இதைவிட பாருங்கள் எங்களிடம் வடக்கு மாகாண சபை இருக்கும் போது எங்களின் கனிய வளங்களை அழிக்கும் நோக்கில் வடக்கு ஆளுநர் இப்பகுதியிலே மாத்தறைப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கபானா வகை சுற்றுலா விடுதி அமைப்பதற்க்கான அனுமதியை வழங்குமாறு பிரதேச சபையை பணித்திருக்கிறார்.

குறித்த விடுதி கட்டுபவர் காணி உரிமையை எவ்வாறு பெற்றார்.? அக்காணிகளுக்குரிய மூல ஆவணங்கள் யாருடையவை…? என்பவற்றிக்கு தெளிவான பதில் இல்லை.

அரச காணிகளுக்கு கள்ள உறுதிகளை முடித்து விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றரர்கள் பிரதேச சபை மாகாண சபையின் அதிகாரங்களுக்கு உட்பட்ட இவ்விடயத்தை ஆளுனர் கையில் எடுத்திருப்பதன் நோக்கம் தான் என்ன?

இவ்வாறு தான் எம் மீதான இன அழிப்பு நடைபெறுகின்றது . இவற்றுக்கு எல்லாம் அப்பால் எங்களுடை விடுதலை போராட்ட வரலாற்றை கூட இந்த பூநகரி மண் பேசும்.

பல மாவீரர்கள் இந்த விடுதலைப்போராட்டத்தில் மடிந்தார்கள் அவர்களின் கனவுகள் நிறைவேற நாங்கள் எங்களுக்குள் ஒர் அணியாக இருக்க வேண்டும். இழந்த எங்கள் இனத்தின் தனித்துவத்தை ஜனநாயக ரீதியில் வென்ற எடுக்க எங்களை பாராளுமன்றம் அனுப்பினீர்கள்.

உங்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய பெறுப்பு எங்களுக்கு உண்டு. இதனால் தான் இன்று நாங்கள் உங்கள் பகுதி வந்திருக்கின்றோம். உங்களின் அடிப்படை பிரச்சனைகள் பலவற்றை எங்களுக்கு கூறினிர்கள்.

இங்கு பூநகரி பிரதேச செயலாளரும் வந்திருக்கின்றார் உங்கள் பிரச்சனைகள் தொடர்பில் அவருடன் கதைத்து தீர்க்கமான முடிவினை உங்களுக்கு நாங்கள் பெற்றுத்தருவோம் என்றார்

இந்த விஜயத்தின் போது பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன் மற்றும் கட்சியின் பெரியபரந்தன் அமைப்பாளர் ஜதீஸ் மற்றும் உருத்திரபுரம் பிரதேச அமைப்பாளர் திலக்சன் கிராம சேவையாளர் சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.ajaffna_001 ajaffna_003 ajaffna_007 ajaffna_011
Leave a Reply