பூநகரி தெளிகரை கிராமத்தில் புதிர்பொங்கும் நிகழ்வு: பா.உ சிறீதரனும் பங்கேற்றார்!

நேற்றைய தினம்(2018/02/25) பூநகரி தெளிகரை கிராமத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.சிறீதரன் அவர்கள் தெளிகரை பிரதேச மக்களை சந்தித்து அவர்களிடம் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியதுடன் கடந்த உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் பூநகரியில் 11வட்டாரங்களையும் வெற்றி பெறவைத்த மக்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்ததுடன் அவர்களால் கொண்டாடப்பட புதிர்பொங்கும் நிகழ்விலும் கந்துகொண்டார்

இவ்நிகழ்வில் பூநகரி பிரதேச சபை உப தலைவர் திரு சி.சிறீரஞ்சன் மற்றும் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் திரு.கருணாகரன்,திரு.கேதீஸ்வரன்,திரு.மு.எமிலியாம்பிள்ளை மற்றும் கரைச்சி பிரதேச சபை தலைவர் திரு.அ.வேழமாலிதன் ,தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திரு ஜெயக்குமார் மற்றும் பள்ளிக்குடா அமைப்பாளர் திரு. ராஜ்குமார்,முழங்காவில் அமைப்பாளர் திரு.யோ.தனராஜ்,திரு.த.குவேந்திரன்,திரு.த.விஜயசங்கர் ஆகியோர் இவ்நிகழ்வில் கலந்து கொண்டனர்.