விடுதலைப்புலிகள் சிறப்பாக பராமரித்த ஆனையிரவு உப்பளத்தின் தற்போதைய நிலை?

விடுதலைப்புலிகளால் சிறப்பாக பராமரிக்கப்பட்ட ஆனையிரவு உப்பளத்தை ஏன் எம்மால் சரிவர பராமரிக்க முடியாதுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவுசெலவு திட்டத்திற்கான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத்தால் ஆனையிறவு உப்பளத்தை இயக்க முடியும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இந்த உப்பளம் இருந்த போது சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த உப்பளத்தை ஏன் இயக்க முடியாது?

உப்பளங்களை தனியார்மயப்படுத்துவதை தவிர்த்து அவை கூட்டுறவு சங்கத்தின் பொறுப்புகளுக்கு கொண்டு வரப்படுமாயின் அவற்றை சிறப்பாக பராமரிக்க முடியும்.

பரந்தன் இரசாயன தொழிற்சாலை இராணுவ முகாமாகவே இன்றும் இருக்கிறது. இது விடுவிக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படுமாயின் இதன் மூலம் பலர் வேலைவாய்ப்பை பெற்று பயனடைவார்கள்.

இதேவேளை நட்டத்தில் இயங்கும் கூட்டுறவுச்சங்கங்களுக்கு வடக்கு மாகாண சபையின் ஊடாக மானிய முறையில் நிதிவழங்கப்பட்டு கடனுதவி வழங்க வேண்டும என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கள் உற்பத்தியாளர்கள் வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட வரியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டு, வரிகள் குறைக்கப்பட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது சிறீதரன் வலியுருத்தினார்.
Leave a Reply