இரணைமடு குளத்திற்கு அருகில் உள்ள புத்த கோயிலை அகற்றுமாறு அறிவித்த சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி, இரணைமடு குளத்திற்கு அருகில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட சிறிய பௌத்த கோயிலை அப்புறப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இராணுவத்தினர் வழிபாடுகளில் ஈடுபடவே இரணைமடு குளத்திற்கு அருகில் பௌத்த கோயில் நிர்மாணிக்கப்பட்டது.

தற்போது அங்கு இராணுவத்தினர் இல்லை என்பதால் அதில் பிரயோசனம் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

3 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா செலவில் இரணைமடு குளம் அபிவிருத்தி மற்றும் நவீனமயப்படுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், குளத்தின் வாயிலை விரிவுப்படுத்த இந்த பௌத்த கோயில் தடையாக இருக்கும் எனவும் இராணுவத்தினரை கொண்டே அதனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.