தமிழ் மக்களை ஒரு அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கையில் வட மாகாண ஆளுனர்

தமிழ் மக்களை மீண்டும் ஒரு அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்லுகின்ற அல்லது அவர்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கைகளில் வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே இறங்கியுள்ளார் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

வடமாகாண ஆளுனர் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வடக்கில் இருந்து இராணுவத்தை குறைக்க வேண்டிய தேவையில்லை என்றும் ஆவா குழுவுக்கும், இராணுவத்திற்கும் எந்த தொடர்புகளும் இல்லை

மேலும் இது தொடர்பில்….

அண்மைய நாட்களில் யாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்கள் மீது தமிழ் மாணவர்கள் தாக்குதல் நடத்தினர் என்பதைக் கூறிக் கொண்டு அதனை ஒரு பெரிய இனவாதமாகவும், தமிழர்கள் சிங்கள மாணவர்களைத் தாக்கினார்கள் என்று கூறி மாணவர்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்ததில் இருந்து அவர்களுக்காக சிங்கள மக்களிடம் ஒரு இனவாத தன்மையை ஏற்படுத்துவதில் வட மாகாண ஆளுனர் மிக கூடிய அளவில் செயற்பட்டிருக்கின்றார்.

அதே நேரம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது அதைப்பற்றி எதுவும் பேசாமல் அதற்காக அந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி எழுத்து மூலமாக கருத்துக்களை வழங்கிய போது அதற்கு சிங்கள மொழியில் ஒரு கடிதத்தை எழுதி மகாவம்சத்தின் சிங்கள பேரினவாத எண்ணத்தை வடக்கு மாகாண ஆளுனர் காட்டியிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் வடக்கு கிழக்கில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற அடக்கு முறைகள் என்பவற்றின் பின்னணியில் இங்கு குவிக்கப்பட்டிருக்கின்ற இராணுவம் தான் காரணம் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

குறிப்பாக 2014ம் ஆண்டு ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இங்கு எந்த இராணுவ முகாமும் குறைக்கப்படவில்லை. யுத்தம் இல்லாத சூழலில் இவ்வாறு இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது இங்கு விவசாய நிலங்களை ஆக்கிரமித்து இராணுவத்தினர் பயிர்செய்கை மேற்கொள்வது மரக்கறி செய்கைகளில் ஈடுபட்டு மரக்கறி வியாபாரங்களில் ஈடுபடுதல் அதேநேரம் சாதாரணமாக சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடத்தி அப்பாவி தமிழர்கள் அதன் மூலம் எடுக்கின்ற வருமானத்தை தடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஒரு அரச பயங்கரவாதத்தின் அடக்கு முறையை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையினுடைய அமைச்சர் ராஜித சேனரத்தின ஆவா குழு என்பது கோத்தபாய ராஜபக்சவின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாகவே சொல்லியுள்ளார்.

அவ்வாறு அவர் குறிப்பிட்ட பின்னர் கூட இராணுவம் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ள போது எவ்வாறு இந்த ஆவா குழு செயற்பட முடியும் என்ற செய்தியைத் தான் வடமாகாண முதலமைச்சர் வெளிப்படையாக கேட்டிருந்தார்.

வடமாகாண ஆளுனர் ஒரு ஏதோச்சதிகாரத்தோடும் ஆணவச் செருக்கோடும் அந்த கேள்விகளை முன்வைத்திருப்பதும், அதனை மூடி மறைப்பதும், ஒரு காலத்தில் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று தமிழர்களை போருக்கு அழைத்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா அதன் பின்னர் டி.பி விஜயதுங்கவையும் மகிந்தவையும் மிஞ்சிய வகையில் சமாதானம் பேசிக்கொண்டு வந்த றெஜினோல்ட் குரேவின் செயற்பாடுகள் அமைந்துள்ளது,

இவர் தன்னுடைய மாகாண ஆளுனர் என்ற எல்லைக்குள் இல்லாமல் எல்லை மீறிச் செயற்படுகின்றார் இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழர்களுடைய மொழியையும் கலாச்சாரங்களையும் அழிக்கின்ற செயற்பாட்டில் வடமாகாண ஆளுனர் தெட்டத்தெளிவாகச் செயற்பட்டு வருகின்றார். ஆளுனர் அவர்கள் தன்னுடைய வீராப்பு பேச்சுக்கள் இனவாத செயற்பாடுகளை கைவிடவேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் ஓர் நல்ல எண்ணத்தை வெளிப்படுத்தாது என்றும் இது நல்லாட்சி அரசின் செயல்களை பெரிதும் பாதிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Leave a Reply