யாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பொன்விழா

யாழ்.சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நேற்று நிலையத் தலைவர் திருவாளர் க.இ.வினாயகன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி. சிறீதரனும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் விந்தன் கனகரட்ணம், வட மாகாண ஆளுனர் செயலக உதவிச் செயலாளர் திரு. ஜெ. எக்ஸ். செல்வநாயகம், வேலணை பிரதேச செயலாளர் திரு. அ. சோதிநாதன் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி. எஸ். மஞ்சுளாதேவி ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக சின்னமடு செபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி சி. ஆனந்தகுமார், சரவணை ஸ்ரீ செல்வக்கதிர்காம முருகன் ஆலய குரு பிரம்ம ஸ்ரீ மயூரன் ஐயா, வேலணை பிரதேசசபை ச.ச.அ. உத்தியோகத்தர் திருமதி சு. புஸ்பராணி, ஜெ/21 கிராம உத்தியோகத்தர் செல்வி ச.தனுருத்திரி, யாழ். சின்னமடு றோ.க.த.க.பாடசாலை அதிபர் திரு. சி. உமாச்சந்திரன், மன். புதுக்குடியிருப்பு அ.மு.க. பாடசாலை ஆசிரியர் திரு.இ.முருகவேல், தீவக இலங்கை தமிழரசு கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. க. குணாளன், முன்னாள் நிலையச் செயலாளர் திரு. ந. தேவன், முன்னாள் நிலையத் தலைவர் திரு. வேலன் கணபதி, நிலையத்தின் போசகர் திரு. ம. கந்தையா, நிலையத்தின் பொருளாளர் திரு. அ. தபேகன் மற்றும சூலக மற்றும் உலக மைய நிறுவனத் தலைவர் திரு. குணாளன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் பொன் விழா மலரினை நிலையத் தலைவர் வெளியிட்டு வைக்க, பிரதம விருந்தினரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி. சிறீதரன், சிறப்பு விருந்தினரான யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து தீவக கோட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்;, உதைப்பந்தாட்டம், டாம், கரம்போட், தாச்சி, மரதன் ஓட்டம், செஸ் ஆகிய போட்டிகளும், பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன

sr1 sr2 sr3 sr4