கிளிநொச்சி முகமாலையில் விரைவில் வெடிபொருட்கள் அகற்றப்படும்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றி மிக விரைவில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக எம்முடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயனுடன் அண்மையில் முகமாலை பகுதிக்கு நேரில் சென்று தற்போதைய நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

வெடிபொருட்கள் அகற்றுவதிலுள்ள தாமதம் காரணமாக தற்போது 258 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக வெளியிடங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

அத்தோடு அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிகள் வழங்கப்படுவதோடு வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தன்னார்வ தொண்டு நிறுவனமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பிரதிநிதி, முகமாலைப்பகுதி என்பது நீண்டகாலம் யுத்தம் இடம்பெற்ற, மிகவும் வெடிபொருட்கள் நிறைந்த ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது. இங்கு வெடிபொருட்களை அகற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு பகுதி வெடிபொருட்கள் அகற்றப்பட்டு அதன் பணிகள் நிறைவு பெற்று வருகின்றன. அதனை மிக விரைவில் மக்கள் மீள்குடியேறுவதற்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.sritharan_discusion002 sritharan_discusion003 sritharan_discusion004 sritharan_discusion009 sritharan_discusion013