கல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்டு வருகின்ற கல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சென்று பார்வையிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், அவருடன் பிரதேச சபை உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த குழுவினர் இந்த பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி, கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம், பேப்பாறைப்பிட்டி வீதியினை புனரமைத்துத்தருவதாக தெரிவித்த போதும் இந்த வீதி கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியின் ஒரு பகுதி தற்போது மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 1.8 மில்லியன் ரூபா செலவில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வேலைகள் தொடர்பில் மக்களுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை மற்றும் வேலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதிக்குச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்த வேலையை நேரடியாகப் பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.




Leave a Reply