ஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி கையொப்பம் திரட்டும் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி அண்மையில் உயிரிழந்தார்.

அவரின் இறுதி கிரியைகள் கடந்த 18ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டிருந்தார்.

தற்போது ஆனந்தசுதாகரின் குழந்தைகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே தனது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு ஜனாதிபதிக்கு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஆனந்த சுதாகரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி பொது சந்தைக்கு முன்பாக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொது மக்கள் பலரும் கையொப்பமிடிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply