முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது!

நேற்று முழங்காவில் செபஸ்தியார் புரத்தில் வசித்துவரும் இரு கால்களையும் இழந்து இனவிடுதலைப் போராட்டத்துக்கு தன்னை அற்பணித்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

இவ் உதவியினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிறீதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் திரு.கமிலோமில்ஸ்சன் அவர்களால் நிதி உதவி செய்யப்பட்டது.

இவ் உதவியினை செய்த திரு.கமிலோமில்ஸ்சன் அவர்களுக்கு குறித்த போராளியின் குடும்பத்தினர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொன்டனர்.

இவ் நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பூநகரி பிரதேச சபை உப தவிசாளர் திரு.சி.சிறிரஞ்சன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் திரு.ஜெயக்காந்தன், திரு.மு.எமிலியாம்பிள்ளை மற்றும் முழங்காவில் பிரதேச இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பாளர் திரு.யோ.தனராஜ், திரு.த.விஜயசங்கர், இரணைமாதநகர் அமைப்பாளர் திரு.மகேந்திரராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Leave a Reply