சேதமடைந்த நிலையில் காணப்படும் முக்கியமான வீதிகளை புனரமைக்க உதவுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு கடிதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் முக்கியமான வீதிகளை புனரமைக்க உதவுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு கடிதம் .
கடந்த மீள்குடியமர்வின் பின்னர் பல கிராமிய வீதிகள் பிரதான வீதிகள் புனரமைக்கப்படாமையினால் இந்த வீதிகளை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் எனப்பலரும் பல்பேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் வரும் அமைச்சுக்களின் கீழ் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு உதவுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு   அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான  வின்சன் வீதி இரத்தினபுரம்வீதி ஸ்கந்தபுரம் முட்கொம்பன் வீதி ஆகியவற்றையும் உள்ளுராட்சி திணைக்களத்தின் கீழ் வருகின்ற விவேகானந்தநகர் கிருஸ்ணபுரம் அம்பாள்குளம் ஆகிய பகுதிகளுகு;கு செல்லும் வைலஸ்வீதி வட்டக்கச்சி மாயவனூர் வீதி கண்ணகைபுரம் முட்கொம்பன் இணைப்பு வீதி என்பன அதிகளவான பாடசாலை மாணவர்கள் வெளிமாவட்ட ஆசிரியர்கள் பொதுமக்கள் என அதிகளவானோர் பயன்படுத்துகின்ற இந்த வீதிகளை புனரமைத்துத்தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதுடன் துறைசார்ந்த திணைக்களங்களுக்கும் குறித்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுLeave a Reply