அ.சு.பேரம்பலம் அவர்களுக்கு இரங்கல்…

வயலும் வயல்சார்ந்த வனப்புமிகு வட்டக்கச்சி மண்ணின் மூத்த குடிமகன் ஐயா அ.சு.பேரம்பலம் அமரத்துவம் அடைந்தார் என்ற செய்தி மனம் ஏற்க்க மறுக்கிறது.

நேர்த்தியான வெள்ளை உடை, கம்பீரமான தோற்றம் அனைத்து தரப்பினருடனும் அன்பொழுக பேசுகின்ற வசீகரம், வயதுக்கு மீறிய இயங்குநிலை, அனைவரது மனங்களில் பேரம்பலவிதானையார் என இடம்பிடித்த ஐயா அ.சு.பேரம்பலம் இன்று எம்மோடு இல்லை என்ற உண்மை வலிக்கின்றது.

1950களின் தொடக்கத்தில் இரணைமடு நீர்த்தேக்கத்தினை மையமாககொண்டு குடியேறிய மக்களுடன் ஒரு கிராமசேவகராக குடியேறி வட்டக்கச்சி இராமநாதபுரம் என்ற இரு பெரும் கிராமத்த்தின் மக்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் இணைந்து பயணித்து,

நீண்டகாலம் கிராமமக்களின் அன்பைப்பெற அரச சேவையாளனாக, நல்ல குடும்பத்தலைவனாக, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த ஐயா பேரம்பலம் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அந்தாபங்கள் தெரிவித்து கொள்கிறேன் .
Leave a Reply