தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும்

வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும் .

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி நேற்று நண்பகல் பாடசாலை அதிபர் ஓங்காரமூர்த்தி தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

நெடுந்தீவு மண்ணில் பிறந்தவர்கள் வரலாற்றில் பல பதிவுகளை மேற்கொண்டு பல அடையாளங்களோடும் இன்றும் இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.வெடியரசன் போன்ற மன்னர்கள் வாழ்ந்த அடையாளங்களையும், தமிழர்களுடைய பூர்வீக வரலாற்றையும் கொண்ட மக்கள் சமூகம் வாழ்கின்ற இந்த மண்ணின் அடையாளத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராஜப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி முதல்வர் கணபதிப்பிள்ளை போன்றவர்கள் இந்த மண்ணில் தான் பிறந்து, இந்த மண்ணில் தான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதைவிட பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் படைப்பாளிகள் உயர்கல்விமான்கள் எனப்பலர் இந்த மண்ணிலே பிறந்து இந்த மண்ணிலேயே வாழ்ந்திருக்கின்றார்கள். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பொருளாதாரத் தடைகளும் நவீன தொழிநுட்ப வசதிகளும் இல்லாத காலத்திலும் கல்வியில் பல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
Leave a Reply