கல்வியில் கிராமங்கள் மாற்றங்களை நோக்கி நகரவேண்டும்

கல்வியில் கிராமங்கள் மாற்றங்களை நோக்கி நகரவேண்டும்

கிளிநொச்சி கண்ணகைபுரம் அ.த.க பாடசாலையில் நேற்று நடைபெற்ற புலமைப்பிரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .

கிளிநொச்சி மாவட்டத்தின் மூலையிலுள்ள இப்பாடசாலைக்கு அதிபர், ஆசிரியர்கள் வருவதற்கு பின் நிற்கின்ற ஒரு பகுதியாகும்.

இந்தக்கிராமத்தினுடைய வீதியையும், போக்குவரத்தினையும் கருதி சிலர் ஒதுங்கிக்கொள்கின்றனர். இவ்வாறான நெருக்கடியான சூழலுக்குள் இந்த பாடசாலைகள் இருக்கின்றன.

இது போன்ற பாடசாலைகளில் பிள்ளைகள் எவ்வளவு நெருக்கடிக்குள் கல்வி கற்கின்றார்கள் என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த பாடசாலையினுடைய கல்வித்தரத்தில் இந்த மாணவர்கள் ஒரு முன்னேற்றத்தைக் காணவேண்டும். கல்வி மாற்றங்களில் கிராமங்கள் மிக முக்கியமானவை.

மாவட்டத்தின் மூலையோரத்தில் இருக்கின்ற இந்த கிராமங்களில் இருந்து மாற்றம் நோக்கி நகர்வது இந்தப்பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்ற மாணவர்களின் திறமைகள் வெளிக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

மேலும், தற்போது படிக்கின்ற சாதிக்கின்ற மாணவர்கள், சாதனையாளர்களாக மாற்றம் பெற வேண்டும் .
Leave a Reply